ஈரானில் பதற்றம் தீவிரம்… அமெரிக்கர்கள் உடனே வெளியேற அறிவுரை!

 
ட்ரம்ப்
 

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டங்களை ஒடுக்க அரசு எடுத்த நடவடிக்கையால் வன்முறை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரான் நோக்கி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ட்ரம்ப்

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் ஈரானில் பதற்ற நிலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

ட்ரம்ப் ஈரான்

இதையடுத்து ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகவல் தொடர்பு துண்டிப்பு, போக்குவரத்து தடைகள் மற்றும் கைது அபாயங்கள் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியும், உணவு, தண்ணீர், மருந்துகளை சேமித்து வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!