உள்துறை அமைச்சர் அமித்ஷா விமான விபத்தில் உயிர் தப்பியவரை நேரில் சந்திப்பு!

 
ரமேஷ்
 

அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம்  AI171, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே  விபத்துக்குள்ளானது. முதற்கட்டமாக தொழில்நுட்ப மற்றும் ஹைட்ராலிக் கோளாறுகளால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என  தகவல்கள் வெளியாகின.  விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், உயிர்த்தப்பிய ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  உயிரிழந்த 241 பேரில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர்.

விமான விபத்து


அதன்படி அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபரின் பெயர் விஸ்வாஸ்குமார் ரமேஷ் ஆகும். அவரின் சகோதரர் அஜய்குமார் விமானத்தில் பயணம் செய்த  நிலையில், அவர் பரிதாபமாக பலியானார். ஆனால் ரமேஷ் மட்டும் விமானத்தின் அவசர வெளியேறும் இடத்திற்கு அருகில் அமர்ந்திருந்து, அங்கிருந்து வெளியே குதித்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
இரத்தக்கறை படிந்த வெள்ளை டி-சர்ட்டும், அடர் நிற பேண்ட்டும் அணிந்த ஒரு நபர் தெருவில் நொண்டி நடப்பதையும், அவருக்கு மருத்துவர் உதவி செய்வதையும் காட்டுகிறது.  முதலில் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்திற்கு நேரடியாக சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷா,  குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் சேர்ந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டார்.  விமானத்திலிருந்து குதித்து உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் ரமேஷை பார்க்க மருத்துவமனைக்கு நேரில் சென்ற அமைச்சர் அமித்ஷா சந்தித்து நலம் விசாரித்தார்.  விமானம் விழுந்து நொறுங்கிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் விடுதியில் காயம் அடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.  

விமான விபத்து
இது குறித்து  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ”ஏர் இந்தியா விமான விபத்தில் பலர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, உயிரிந்தோரின் குடும்பங்களுக்கு துணையாக இருப்போம். விமான விபத்தில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்தேன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகே சொல்ல முடியும்”எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது