பாதுகாப்பு வளையத்துக்குள் மதுரை ... அமித்ஷா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணியை உறுதி செய்வது, கட்சியை வலுப்படுத்துவது, தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் திமுக பொதுக்குழுக்கூட்டம் மதுரையில் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் மதுரையை டார்கெட் செய்து வருகின்றன.
அதன்படி பாஜக- அதிமுக இன்று மாநில , மாவட்ட, மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று இரவு தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

பாஜக முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்ற நிலையில் தனியார் விடுதியில் தங்கி அவர் ஓய்வெடுத்து வருகிறார். அமித்ஷா வருகையை ஒட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். இதனையொட்டி கோயில் வளாகத்தை சுற்றி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்பிறகு மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பி சட்டப்பேரவை தேர்தல் வியூகம் , பாஜகவுக்கு சாதகமான தொகுதிகள் எவை என்பது குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்தார். 3 மணிக்கு மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இங்கு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
