இன்று அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு... பரபரக்கும் தமிழக அரசியல் வட்டாரம்!

 
அமித்ஷா

தமிழ்நாடு பாஜக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ளார். இந்த தமிழக வருகையின் போது கூட்டணி குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அண்ணாமலை, தமிழக பாஜக புதிய தலைவர் நியமனத்திற்கும் அமித்ஷா வருகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அமித்ஷா

அரசியல் மற்றும் கூட்டணி தொடர்பான பயணமாகவே  அமித்ஷா வருகையை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால்  அமித்ஷா சென்னை வருகிறார் எனக் கூறியுள்ளார். 

அமித்ஷா

தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சந்திக்கிறார். இதேபோல் அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்களை அமித்ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.   இதனிடையே அமித்ஷா இன்று பிற்பகல்  12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்த  அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web