நாளை மறுநாள் அமித்ஷா தமிழகம் வருகை!
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி காரைக்காலில் நடைபெறும் பாஜ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதற்காக அவர் 13ஆம் தேதி தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். அன்றிரவு திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி மறுநாள் காலை திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் செல்கிறார்.
காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கும் அமித்ஷா, அங்கிருந்து கார் மூலம் நகராட்சி சந்தை திடலுக்கு காலை 11 மணிக்கு செல்கிறார். அங்கு பாஜ சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டம் முடிந்ததும் மீண்டும் ஹெலிகாப்டரில் திருச்சி வந்து, அங்கிருந்து விமானத்தில் சேலம் புறப்படுகிறார்.
அமித்ஷா திருச்சியில் தங்கும் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்களும் திருச்சியில் முகாமிட உள்ளனர். திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் நடைபெறும் ‘பாரதம் அடுத்த தசாப்தம்’ நிகழ்விலும் அவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், தமிழக தேர்தல் நிலவரம் குறித்து பாஜ நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
