அம்மாடியோவ்...!! ரூ901 கோடி வசூல் சாதனை !! பட்டைய கிளப்பும் ”பதான்”!!

 
பதான்

பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது ஷாருக்கானின் “ பதான் “ திரைப்படம். இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிடக்கூடாது இதற்கு தடை விதிக்க வேண்டும் என நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளும் , குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. அத்தனையும் மீறி திரைக்கு வந்த பதான் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ஷாருக்கான் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்க்கின்றனர்.

ஷாருக்கான் , தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம்  என நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள  படம் ‘பதான்’ .இந்த திரைப்படம் கடந்த மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Pathan

இந்தப் படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் குவித்திருந்தது. 8 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ.667 கோடியை வசூலித்தது.

பதான்


இந்நிலையில் பதான் திரைப்படம் வெளியாகி 17 நாட்களில் உலக அளவில் ரூ. 901 கோடி வசூலித்துள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் கூறுகையில், உலக அளவில் பதான் திரைப்படம் 901 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக ரூ.558.40 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் 342.60 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. இந்தி சினிமா வரலாற்றில் பதான் திரைப்படம் உலக அளவில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பதான் படம் வசூலில் இமாலய சாதனை படைத்து இருப்பதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  உலகம் முழுவதும் பதான் திரைப்படம் இதுவரை ரூ.901 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.  இந்தியாவில் மட்டும் ரூ.558.40 கோடியும், வெளிநாடுகளில் ரூ.342.60 கோடியும் வசூல் சாதனை செய்துள்ளது.  உலக அளவில் அதிக வசூலை செய்த இந்தி படம் என்ற பெருமையை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web