அம்மாடியோவ்... அரைக்கோழி ரூ5500/- ஆ.... பாரம்பரிய இசை கேட்டு பால் குடித்து வளர்த்த கோழி !

 
அம்மாடியோவ்... அரைக்கோழி ரூ5500/- ஆ.... பாரம்பரிய இசை கேட்டு பால் குடித்து வளர்த்த கோழி !

 

சீனாவில் ஷாங்காய் நகரத்தில் செயல்பட்டு வரும் பிரம்மாண்ட உணவகத்தில் அரை கோழிக்கறிக்கே ரூ.5,500 வசூலிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணவகத்தில் உணவு உண்ட தொழிலதிபர் ஒருவர், ரசீதில் காணப்பட்ட விலை குறித்து ஆச்சரியப்பட்டு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். உணவக ஊழியர் இதற்கு அளித்த பதில், அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அம்மாடியோவ்... அரைக்கோழி ரூ5500/- ஆ.... பாரம்பரிய இசை கேட்டு பால் குடித்து வளர்த்த கோழி !

அந்த ஊழியர், “இந்த கோழி பாரம்பரிய சீன இசை கேட்டு வளர்ந்தது. தண்ணீருக்கு பதிலாக பால் கொடுத்து வளர்க்கப்பட்ட சன்ஃபிளவர் இனத்தைச் சேர்ந்தது” எனக் கூறியுள்ளார். இது தொழிலதிபரிடம் கேலியாகப் பதிவாக, அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் சம்பவத்தினைப் பகிர்ந்துள்ளார். நெட்டிசன்கள் இதனை பார்த்து அந்த உணவகத்தின் விலையை குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

இது குறித்து சௌத் சைனா மார்னிங் போஸ்ட் ”சன்ஃபிளவர் சிக்கன்’ என்பது அரிசி போன்ற தானியங்களுக்கு பதிலாக சூரியகாந்தி தண்டு மற்றும் இதழ்களை உணவாக வழங்கி வளர்க்கப்படும் ஒரு சிறப்பான கோழி இனமாகும். இந்த வகை சிக்கன் ‘எம்பரர் சிக்கன்’ என அழைக்கப்படுகிறது. இதன் சுவை, நிறம் மற்றும் துல்லியமான வளர்ப்பு முறையால், சில உயர்தர உணவகங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த கோழிகளுக்கு பாலை கொடுப்பதில்லை என்பது உண்மை. பாரம்பரிய இசை ஒலிக்குள் வளர்க்கப்படுவது குறிப்பிட்ட பண்ணை கலாச்சாரம் மட்டுமே. உண்மையில், உணவின் மேன்மையை விட, அதற்குச் சொல்லப்படும் ‘கதை’தான் விற்பனைக்கு உதவுகிறது என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?