அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தமிழ் கலாச்சாரப்படி 70 வயது பிரான்ஸ் நாட்டவரை கரம் பிடித்த 60 வயது ஆப்பிரிக்க பெண்!

காதலுக்கு கண்ணில்லை என்பது பழமொழி. ஆனால் வயதும் கூட இல்லை என்பதை சமீபத்தில் நடைபெற்ற திருமணம் மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தியுள்ளது. வெளிநாட்டினருக்கு பொதுவாக தமிழ் கலாச்சாரத்தின் மீது கொள்ளை ஈர்ப்பு தான். இதன் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள்.
சமீபத்தில் கூட வெளிநாட்டில் இருந்து வந்து ஒரு ஜோடி தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை கோவிலில் வெளிநாட்டு தம்பதி தற்போது திருமணம் செய்து கொண்டது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் 70 வயது நபரை ஆப்பிரிக்காவில் வசித்து வரும் 60 வயது பெண்ணை காதலித்து வந்தார்.
இந்நிலையில் இருவரும் தற்போது தமிழ் கலாச்சாரத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக இந்துமுறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இதற்காகவே தற்போது தமிழ்நாட்டிற்கு வந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதியினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!