சென்னையில் இன்று மாலை அமமுக சார்பில் இஃப்தார் நோன்பு!

இந்நிலையில் இன்று மார்ச் 26ம் தேதி மாலை சென்னையில் அமமுக சார்பில் ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய பெருமக்கள் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி, தன்னால் இயன்றதை பிறருக்கு தர்மம் செய்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை பின்பற்றி ஆன்மிக சிந்தனை, தொழுகை,ஏழைகளுக்கு உதவுதல் போன்ற நல்ல செயல்களுக்கு வழிவகுக்கும் வகையில் இஸ்லாமியப் பெருமக்களால் கடைபிடிக்கப்படும் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தலைமையில் இன்று 26.03.2025, புதன் கிழமை மாலை 4 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் உள்ள கழக சிறுபான்மையினர் நலப்பிரிவின் நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு/வட்ட, கிளைக் கழகம் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், இஸ்லாமிய சகோதரர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!