பஞ்சாப் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் கைது.. பஞ்சாப் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்!

 
அம்ரித் பால் சிங்

இந்தியா முழுவதும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் பெயர் தான் அம்ரித் பால் சிங். நீண்ட தேடுதலுக்கு பிறகு தற்போது அவரை போலீசார், பஞ்சாப்பில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். கையில் குடையுடன் சாமானிய மனிதராய் தெருக்களில் அம்ரித் பால் சிங் சுற்றி திரிந்த சிசிடிவி வீடியோ வெளியான நிலையில், தேடுதல் வேட்டை தீவிரமடைந்தது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் பால் சிங், 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பானது பஞ்சாப் மாநிலத்தில், பாஞ்சாப்பை பிரித்து தனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த அமைப்புக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அம்ரித் பால் சிங்

கடந்த மாதம் பஞ்சாபின் ரூப்கர் மாவட்டம் சாம் கவுர் சாகிப் என்ற பகுதியைச் சேர்த்த பரிந்தர் சிங் என்பவரை கடத்திச் சென்று தாக்கியதாக அம்ரித்பால் சிங் உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரில் ஒருவரான லவ் ப்ரீத் சிங்க் என்பவரை போலீசார் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்திருந்தனர்.

அப்போது அம்ரித்பால் சிங் தனது தலைமையில் ஆதரவாளர்களுடன் அஜினாலா காவல் நிலையத்திற்குள் புகுந்து வாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் வந்து காவலர்களிடம் சண்டை போட்டுள்ளனர். பின்னர் தனது ஆதரவாளரையும் அங்கிருந்து அழைத்துச்சென்றார்.

இது தொடர்பாக கடந்த சில வாரமாக அம்ரித் பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் பஞ்சாபிலிருந்து தப்பித்துச் சென்ற அம்ரித்பால் சிங் நேபாளத்திற்கு சென்றதாகக் கூறப்பட்டது. 

அம்ரித் பால் சிங்

தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரை மார்ச் 18ம் தேதி முதல் போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது அவர் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் பஞ்சாப் மாநிலம் மோகாவில் சரணடைந்த அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரித்பால் சிங் கைதை தொடர்ந்து மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web