ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன்... 24 மணி நேரமாக போராடிய மீட்பு குழு! வைரலாகும் வீடியோ!

மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவதும் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு தீர்வுகாண அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் ஆழ்துளை கிணறு விபத்து நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது.
அந்த வரிசையில் போபாலில் சிறுவன் ஒருவன் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில், மூடப்படாத நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் 8 வயது சிறுவன் நேற்றைய தினம் தவறி விழுந்துள்ளான்.
Hectic rescue efforts continued in Madhya Pradesh's Vidisha as a 7-year-old boy remained trapped in a borewell.
— editorji (@editorji) March 15, 2023
Watch here: https://t.co/LW9kaTvNab pic.twitter.com/8iBwHi0qyw
இதையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சிறுவன் தற்போது 43 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாகவும், ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு, சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மீட்புபடையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மீட்பு பணியில் 3 மாநில மீட்பு படை அணிகள் மற்றும் ஒரு தேசிய மீட்பு படை அணி ஆகியோர் ஈடுபட்டனர். தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் மற்றொரு குழி தோண்டப்பட்டு, சிறுவனை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். எனினும் அவரது உடல்நிலை குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க