விண்வெளிக்குச் சிறகு விரிக்கும் இந்திய சிறுமி... நாசாவின் சிறப்புப் பயிற்சிக்குத் தேர்வாகி சாதனை!

 
விண்வெளி நாசா

இந்தியாவின் விண்வெளித் துறை வரலாற்றில் மற்றொரு நட்சத்திரமாக ஜொலிக்கத் தயாராகி வருகிறார் குஜராத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி மஹி ஹேமங் குமார் பட். அகமதாபாத் நகரில் உள்ள லோட்டஸ் ஆங்கிலப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் மஹி, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் 'ஸ்டெம்' (STEM) கல்வித் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தச் சாதனைத் திட்டத்தின் மூலம், நாசாவுக்கு 5 நாட்கள் பயணம் செய்யவுள்ள அவர், அங்குள்ள ஆய்வகங்களில் செயற்கைக்கோள் ஏவுதல் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள உள்ளார்.

நாசா

மஹியின் விண்வெளி ஆர்வம் அவரது சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. ஆசிரியர் மகளான மஹிக்கு, வானியல் மீதான அதீத ஆர்வத்தைக் கண்டு அவரது தந்தை வானியல் சார்ந்த புத்தகங்களை வாங்கித் தந்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்துள்ளார். கடின உழைப்பின் பலனாக, அவர் முதலில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் (IIRS) திட்டத்திற்குத் தேர்வானார். அதனைத் தொடர்ந்து, நாசா நடத்திய கடினமான ஆன்லைன் தேர்வுகளிலும் பங்கேற்று வெற்றி பெற்று, தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கான உலகளாவிய அமைப்புகளான ஐரோப்பிய, ஆஸ்திரேலிய மற்றும் ஐக்கிய அரபு அமீரக விண்வெளி கழகங்களிலும் அவர் உறுப்பினராகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நாசா

தனது சாதனை குறித்து மகிழ்ச்சியுடன் பேசிய மஹி, "சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா மற்றும் சுபான்ஷு சுக்லா ஆகியோரே எனது முன்மாதிரிகள். குறிப்பாகச் சுனிதா வில்லியம்ஸைப் போலவே நானும் ஒருநாள் விண்வெளிக்குச் சென்று சாதனை படைக்க விரும்புகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நாசா பயணத்தின் மூலம் கிடைக்கப்போகும் அனுபவங்கள், தனது எதிர்கால விண்வெளி ஆய்வுப் பயணத்திற்கு ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு சாதாரண பள்ளி மாணவியின் இந்த இமாலயச் சாதனைக்குத் தற்போது பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!