சினிமா பாணியில் நூதன முயற்சி ... தாமரைத் தண்டு மூலம் சுவாசித்து 5 மணி நேரம் குளத்திற்குள் பதுங்கிய பலே திருடன்!

 
மபி மபி

 

மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு பெண் பயணிகளைக் குறிவைத்து நகை மற்றும் பணத்தைத் திருடி வந்த ஹர்விந்தர் சிங் என்ற கொள்ளையனைப் பிடிக்க ரயில்வே போலீசார் நடத்திய 'சேஸிங்', ஒரு த்ரில்லர் திரைப்படக் காட்சியையே மிஞ்சும் வகையில் அமைந்தது. ஜபல்பூர் அருகே ரயிலில் பெண்ணின் கைப்பையைத் திருடிய ஹர்விந்தர், போலீசார் துரத்துவதைக் கண்டு சிஹோரா நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து குதித்துத் தப்பி ஓடினார். போலீசாரிடம் சிக்காமல் இருக்க, இருளையும் அங்கிருந்த பாசி படர்ந்த குளத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி அவர் உள்ளே குதித்து மறைந்துகொண்டார்.

குளத்தில் குதித்து பல மணி நேரமாகியும் அவர் வெளியே வராததால், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் எனப் போலீசார் அஞ்சினர். இதையடுத்து நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, குளத்தின் ஒரு பகுதியில் பதுங்கியிருந்த ஹர்விந்தரை வீரர்கள் கண்டுபிடித்து வெளியே இழுத்து வந்தனர். அவர் உயிருடன் இருப்பதைக் கண்டு வியந்த அதிகாரிகளுக்கு, அவர் பயன்படுத்திய தந்திரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குளத்தில் படர்ந்திருந்த தாமரைத் தண்டின் துளை வழியாகச் சுவாசித்து, ஒரு நீர்மூழ்கிக் கப்பல் போல அவர் நீருக்குள்ளேயே பதுங்கியிருந்தது தெரியவந்தது.

ஹர்விந்தர் சிங் பல மாநிலங்களில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளி என்பதும், அவர் மீது நூற்றுக்கணக்கான திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் அம்பலமானது. ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களைத் திட்டமிட்டுத் தொடர்ந்து திருடி வந்ததை அவர் ஒப்புக்கொண்டார். பிடிபட்டபோது அவரது சாதுர்யம் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தினாலும், அந்தப் புத்திசாலித்தனத்தைக் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தியதைக் கண்டு அவர்கள் விரக்தியடைந்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரிடம், இழந்த நகைகள் மற்றும் பணத்தை மீட்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!