ஜனவரி 21ம் தேதி தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு… !

 
தேர்தல் ஆணையம்
 

 

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ‘இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை மாநாடு–2026’ நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலிருந்தும் தேர்தல் மேலாண்மை அமைப்புகள் பங்கேற்கின்றன. சுமார் 100 சர்வதேச பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தேர்தல் ஆணையம்

இந்த மாநாட்டில் 4 ஐ.ஐ.டி., 6 ஐ.ஐ.எம்., 12 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐ.ஐ.எம்.சி. உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கிறார்கள். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், தேசிய மற்றும் சர்வதேச கல்வி வல்லுனர்கள் தலைமையில் 36 கருப்பொருட்களில் குழு விவாதங்கள் நடைபெற உள்ளது.

வாக்காளர்கள் தேர்தல் ஆணையம்

மாநாட்டின் முன்னோட்டமாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி கலந்து கொண்டு, சர்வதேச மாநாட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் ஒவ்வொரு தரப்பின் பங்கு குறித்து விளக்கினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!