இளம்பெண்களே உஷார்... வாட்ஸ்-அப்ல வந்த மகளின் நிர்வாண புகைப்படம்! போலீசார் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

 
பெண்

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அறிமுகமில்லாத எண்ணில் இருந்து வந்துள்ளது. அதோடு மார்பிங் செய்த அந்த ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.  

பெண்

இதைப் பார்த்து அப்பெண் மற்றும் பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் அனுப்பியவர் கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (27) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சைபர் க்ரைம் போலீசார் அருண்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

பெண்

மேலும் இது போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். மேலும் அப்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்களே... இது போன்ற சமயங்களில் பயப்படாதீர்கள். தைரியமாக உங்கள் பெற்றோர்களிடம் சொல்லுங்க. பெத்தவங்களை விட வேறொருவர் நம்மைக் காப்பாற்ற முடியாது. உங்களது பயம் தான் இது போன்ற கயவர்களுக்கு ஆயுதம். பெண்கள் பயப்படாமல் இது போன்ற செயல்களை தைரியமாக எதிர்கொண்டால் மட்டுமே பிரச்சனைகளில் இருந்து வெளிவர முடியும். பெற்றோர்களிடம் கூறி விட்டு, காவல் நிலையத்தில் புகாரளியுங்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web