விமான நிலையம் அருகே அடிபட்டு கிடந்த ஆந்தை…

 
ஆந்தை
 

திருச்சி விமான நிலையம் அருகே அடிபட்ட நிலையில் ஆந்தை ஒன்று கிடந்தது. அம்பலத்துக்காரன்பட்டி பகுதியில் இதை கண்ட பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அடிபட்ட ஆந்தையை வனத்துறையினர் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆந்தையின் நிலைமை சீராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியன் பார்ன் ஆவுல் இனத்தைச் சேர்ந்த ஆண் ஆந்தை இது. சுமார் 2 வயது இருக்கும் என கூறப்படுகிறது. விமானம் அல்லது வாகனம் மோதியதால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. உடல்நலம் முழுமையாக சரியானதும் பாதுகாப்பான இடத்தில் விடப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!