மறக்க முடியாத டிசம்பர் 26… 21 ஆண்டுகளாக ஆறாத சுனாமி வடு...!
26-12-2004. இந்த நாளை யாராலும் எளிதில் மறக்க முடியாது. அன்றுதான் ஆழிப்பேரலை எனும் சுனாமி இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்கள் பேரலைகளால் சூறையாடப்பட்டன. உறவுகளை இழந்த பலர், இன்றும் மாறாத சோகத்துடன் கண்ணீரோடு வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் சுனாமி தாக்கி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அந்த வடு மாறவில்லை. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் சுனாமிக்கு பலியானார்கள்.

இந்த நிலையில் சுனாமி தாக்குதலின் 21-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர கிராமங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடலில் பால் ஊற்றி, பூக்கள் தூவி, நினைவிடங்களில் மீனவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. கடலூரிலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு நாளையொட்டி பல இடங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
