புஸ்ஸி ஆனந்த் முன்பே தவெகவினர் மோதல்... மாலையைத் தூக்கி வீசியதால் தொண்டர்களிடையே பரபரப்பு!

 
புஸ்ஸி தவெக

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புப் பிரச்சாரக் கூட்டம் ஈரோடு பெருந்துறையில் நாளை (டிசம்பர் 18) நடைபெற உள்ள நிலையில், நேற்று அங்கு ஆய்வு செய்யச் சென்ற கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில், தவெக-வின் மாவட்ட நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் சமீபத்தில் தவெகவில் இணைந்தார். இவருக்குத் தவெகவின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் என்ற இரண்டு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஈரோடு செங்கோட்டையனின் சொந்த மாவட்டம் என்பதால், நாளைய தினம் விஜய் பங்கேற்றுப் பேசவிருக்கும் மக்கள் சந்திப்புப் பிரச்சாரக் கூட்டத்துக்கு இவர் பிரதானமாக ஏற்பாடு செய்து வருகிறார்.

புஸ்ஸி தவெக

நேற்று இரவு கூட்டம் நடக்கும் இடத்தை ஆய்வு செய்வதற்காகத் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அங்கு வந்தார். அப்போது செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட தலைவர் பாலாஜி உள்ளிட்ட பிற நிர்வாகிகளும் அவருடன் இருந்தனர். இந்தச் சூழலில் தவெக-வினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக-வினர் சிலர் மாலையுடன் புஸ்ஸி ஆனந்தை வரவேற்கச் சென்றனர். இதற்கு ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த தவெக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புஸ்ஸி தவெக

ஈரோடு போன்று தர்மபுரி மாவட்டத்திலும் மக்கள் சந்திப்புப் பிரச்சாரக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அப்போது ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளைப் பேச விடாமல் தடுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவானது. அதிருப்தி அடைந்த தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள், கொண்டு வந்திருந்த மாலையைத் தூக்கி வீசினர். இந்தச் சம்பவம் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையிலேயே நடந்ததால், அங்குப் பெரும் பரபரப்பு நிலவியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!