கொள்கையை விட்டு நிதி பெற வேண்டிய அவசியம் தேவையில்லை... அன்பில் மகேஷ் ஆத்திரம்!

தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜக கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொது நூலக இயக்கம் சார்பில் சென்னை இலக்கிய திருவிழா - 2025 நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் “தமிழகத்தில் பாஜகவினர் செல்லும் இடமெல்லாம் ஒரு திருக்குறள் சொல்லிவிட்டு மறுபுறம் சமஸ்கிருதத்திற்கு 1488 கோடி நிதி ஒதுக்குகிறார்கள். நாங்கள் பிடிவாதம் பிடிக்கவில்லை, தெளிவாக இருக்கிறோம்.
எங்களுக்கு இரு மொழி கொள்கை மட்டுமே போதுமானதாக உள்ளது. முடிந்தவரை எங்களை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். உலக நாடுகளிலேயே தமிழ்நாட்டை பாராட்டி வரும் நிலையில், மத்திய அரசு தமிழ்நாடு மீது மொழியை திணித்து வளர்ச்சியை தடுக்க வேண்டும் என நினைக்கிறது.தமிழ்நாடு மக்கள் உணர்வுபூர்வமாகவும் உயிராகவும் நினைக்கும் மொழியை தடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மறைமுகமாக வேலை செய்கிறது. மறைமுகமாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கொண்டுவர முயற்சிப்பதை தமிழ்நாடு முதலமைச்சர் தடுத்து வருகிறார்.
2000 கோடியல்ல ரூ10000 கோடியாக கொடுத்தாலும் தேவையில்லை, கொள்கையை விட்டு நிதி பெற வேண்டிய அவசியம் தேவையில்லை என முதல்வர் சொல்லிவிட்டார். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகின்றனர். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!