43 லட்சம் குழந்தைகளின் தலையில், வயிற்றில் அடிக்காதீர்கள்... கர்ஜித்த அன்பில் மகேஷ்!

இந்தியாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் பின்பற்ற வேண்டும் என கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒன்றிய அரசை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
Let me be crystal clear:
— Anbil Mahesh (@Anbil_Mahesh) February 18, 2025
We REJECT the NEP2020!
We REJECT PM SHRI School!
We REJECT Hindi imposition!#SaveTNRights#StopHindiImposition#BJPCheatsTN pic.twitter.com/Cj68cfbshK
மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது இவைகளை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தாய்மொழிக் கல்வியை தடுக்காதே என ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மத்திய அரசுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த, மொழிப் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். ரூ.2,151 கோடி உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? உத்தரப்பிரதேசத்தில் 25,000 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு ரூ.15,000 தனியார் பள்ளிகளை திறந்தார்கள், அதையே தான் தமிழ்நாட்டிலும் செய்ய முயற்சிக்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மொழி உரிமையில் கை வைப்பது என்பது தேன் கூட்டில் கை வைப்பதற்குச் சமம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது. நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஒன்று கூட வேண்டும். 43 லட்சம் குழந்தைகளின் தலையில், வயிற்றில் அடிக்காதீர்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக திமுக அரசு மீது ஒன்றிய அரசு குற்றம் சாட்டிவருகிறது. மாநில கல்விக்குழு விவாதித்து அதன்பிறகே கையெப்பம் இடுவோம் என தெளிவாக கூறினோம்” எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!