அன்புமணி மாற்றம் ஜனநாயகம் படுகொலை... பாமக பொருளாளர் திலகபாமா ஆவேசம்!

 
 அன்புமணி மாற்றம் ஜனநாயகம் படுகொலை...  பாமக பொருளாளர் திலகபாமா ஆவேசம்! 
பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம் செய்யப்பட்டதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.  பாமக தலைவராக இருந்த அன்புமணி இனி  செயல்தலைவராக  செயல்படுவார், பாமகவின் தலைவராக இன்று முதல் தான் இருப்பேன் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பு கட்சியின் வளர்ச்சிக்காகவும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி அறிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதை இப்போது ஊடகங்கள் முன்பாக அறிவிக்க முடியாது, சிறுக சிறுக தெரிவிப்பேன் எனக் கூறினார். 
  அன்புமணி மாற்றம் ஜனநாயகம் படுகொலை...  பாமக பொருளாளர் திலகபாமா ஆவேசம்! 
இந்நிலையில் பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம் செய்யப்பட்டதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.   பாமக பொருளாளர் திலகபாமா, “பாமகவில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. ராமதாஸ் அய்யா இதுவரை எடுத்த எல்லா முடிவுகளும் சரியே, ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம்... அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன். தனிநபர்களைவிட தலைமை பெரியது. தலைமையை விட இயக்கம் பெரியது. இயக்கத்தைவிட சமூகம் பெரியது” என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web