அன்புமணி தான் பாமக தலைவர்... ராமதாஸ் தரப்புக்குச் ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்!

 
அன்புமணி ராமதாஸ் பாமக

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைவர் பதவி குறித்து, நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நீண்ட காலமாக நீடித்து வந்த உட்கட்சிப் பூசலுக்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India - ECI) தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு, டாக்டர் ராமதாஸ் தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க. தலைவர் பதவி தொடர்பாக, இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் பல கடிதங்கள் மூலம் முறையீடுகளைச் செய்து வந்தனர். டாக்டர் ராமதாஸ் தரப்பில், "முன்னாள் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் கடந்த மே 28, 2025 அன்று காலாவதியாகிவிட்டது. புதிய தலைவராக டாக்டர் எஸ். ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மே 30, 2025 முதல் அவரே கட்சியின் தலைவர்" என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது.

 ராமதாஸ்

இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, தேர்தல் ஆணையம் டாக்டர் ராமதாஸுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில், தேர்தல் ஆணையப் பதிவுகளின்படி, பா.ம.க. நிர்வாகிகளின் பதவிக்காலம் ஆகஸ்ட் 1, 2026 வரை செல்லுபடியாகும் என்றும், டாக்டர் அன்புமணி ராமதாஸே தொடர்ந்து கட்சியின் தலைவராக உள்ளார் என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "டாக்டர் ராமதாஸ் நீங்கள் கட்சியின் தலைவராக இருப்பதாகக் கருதினால், இந்த நிர்வாகப் பிரச்சினையைத் தீர்க்கக் கட்சி அமைப்பு அல்லது தகுதி வாய்ந்த நீதிமன்றத்தை அணுகிக் கொள்ளுங்கள்" என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

 ராமதாஸ், அன்புமணி

தேர்தல் ஆணையத்தின் இந்தக் கடிதம் டாக்டர் ராமதாஸ் தரப்பினருக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கட்சியின் கவுரவத் தலைவரான ஜி.கே. மணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனடியாக டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. மணி, "அன்புமணி ராமதாஸ் போலி ஆவணங்கள் மூலம் தேர்தல் ஆணையத்தை நம்ப வைத்து மோசடி செய்துள்ளார். இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. கட்சியைத் திருடும் நடவடிக்கையாக இதைப் பார்க்கிறோம். எங்களைக் கோர்ட்டுக்குப் போகச் சொல்லியிருப்பது கண்டனத்துக்குரியது. தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயலைக் கண்டித்துச் சென்னையில் இருந்து தொண்டர்களை அழைத்து வந்து டெல்லியில் போராட்டம் நடத்துவோம்" என்று ஆவேசமாகக் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!