பணிந்தார் அன்புமணி... “ஐயா.. மன்னிச்சிடுங்க.. என்ன செய்யனும்னு சொல்லுங்க..” ராமதாஸிடம் மன்னிப்பு கோரினார்!
"அய்யா என்னை மன்னித்து விடுங்க.. தந்தையிடம் மன்னிப்பு கேட்பது பெரிதல்ல" என பாமக நிறுவனரும், அன்புமணியின் தந்தையுமான மருத்துவர் ராமதாஸிடம் அன்புமணி ராமதாஸ் மன்னிப்புக் கோரியுள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கும், அதன் கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில், இந்த குடும்ப பிரச்சனை உட்கட்சி மோதலாகவும் கட்சி மேடைகளில் எதிரொலித்தது. இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள இரு அணியைச் சேர்ந்த கட்சியினரும், கட்சியில் பதவியைப் பிடிப்பதற்காக அணி பிரிந்து நிற்க துவங்கினார்கள். இருவரும் மாறி, மாறி நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். அதன்படி இதுவரை 60க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். 0 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 39 மாவட்ட தலைவர்களை அவர் மாற்றியுள்ளார்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸால் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் பாலு, திலகபாமா, மாநில - மாவட்ட மற்றும் ஒன்றிய பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்க்தில் பேசிய அன்புமணி, "திருவள்ளூரில் முப்போகம் விளையும் 1,200 ஏக்கர் நிலத்தை பறித்து அமெரிக்க நிறுவனத்திற்கு தாரை வார்க்க திமுக அரசு துடிக்கிறது. ஏன் அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு தரிசு நிலம் அதிகம் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தை திமுக அரசு ஒதுக்கலாமே? திமுக ஆட்சி முடிவுக்கான கவுண்டவுன் இன்று முதல் தொடங்கி விட்டது.
சமூகநீதிக்காக பாமகவை தொடங்கிய ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். சமூக நீதி பற்றி பேச முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை. சமூகநீதியின் துரோகி திமுக. கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். 2026ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டனிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். அதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும். தமிழகத்தை ஆள தகுதியான ஒரே கட்சி பாமக.

மருத்துவர் ஐயா ராமதாஸுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். என் மீது ஏதாவது கோபம் இருந்தால், ஐயா என்னை மன்னித்து விடுங்கள். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்றும் பெரிதல்ல. ராமதாஸ் ஐயா நீண்ட ஆயுளுடன் 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
தேசிய தலைவர்; நாட்டின் மூத்த அரசியல் தலைவர் ஐயா ராமதாஸ். ஐயா டென்ஷன் ஆக வேண்டாம். வருத்தப்படாதீர்கள். நீங்கள் உருவாக்கிய கட்சி இது; நீங்கள் கோபப்படக்கூடாது. கடினமான காலங்களைக் கடந்து வந்தவர் நீங்கள். பல தியாகங்களை செய்தவர் ஐயா ராமதாஸ். என்ன செய்ய வேண்டும் எனக் கூறுங்கள்; மகனாக, பாமக தலைவனாக டக் டக்கென நான் செய்கிறேன்." என்று பேசியிருக்கிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
