12-ம் வகுப்பு மாணவி படுகொலை ... திமுகவுக்கு அன்புமணி கடும் கண்டனம்!

 
அன்புமணி
 

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஷாலினி (17) காதலிக்க மறுத்ததால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 19 காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் முனியராஜ் (21) என்பவர் கத்தியுடன் தாக்கி படுகொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். மீனவர் மாரியப்பனின் மகளான ஷாலினியை சில நாட்களாக காதலிக்க வற்புறுத்தி வந்த முனியராஜை, மாணவியின் குடும்பம் முன்னதாகவே எச்சரித்திருந்தது.

ராமேஸ்வரம்

இந்தக் கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலை கிளப்பியுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். “திமுக ஆட்சியில் சமூக விரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை” என குற்றம் சாட்டிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு மாநில அரசு பொறுப்பு எடுக்க வேண்டும் என்றார். காவல் போலீசின் அலட்சியம் காரணமாக இத்தகைய குற்றங்கள் நேருகின்றன என்று அவர் வலியுறுத்தினார்.

அன்புமணி

2021 முதல் 2023 வரை 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதையும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்குகள் பெருமளவில் உயர்ந்திருப்பதையும் அன்புமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டார். இராமேஸ்வரம் சம்பவத்தில் முனியராஜை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், ஷாலினி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!