அதிமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்… அழகர் கோவிலில் அரிவாள் காணிக்கை!
மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவில் மற்றும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். தனது மனைவி சௌமியா மற்றும் இளைய மகளுடன் ஆன்மீக பயணமாக வந்த அவர், பெருமாளை வழிபட்டார். தொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தம் மற்றும் பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலிலும் தரிசனம் செய்தார்.

பின்னர் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு சென்ற அன்புமணி, 11 அடி நீள அரிவாளை காணிக்கையாக செலுத்தினார். குடும்பத்தினருடன் வழிபாடு செய்த அவர், அங்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இந்த நிகழ்வு பக்தர்களிடையே கவனம் பெற்றது.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மக்களின் ஆதரவுடன் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார். திமுக ஆட்சியில் இளைஞர்களிடம் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்றும் கூறினார். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்பதால் வெற்றி உறுதி என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
