ஆந்திர முதல்வரின் தங்கை ஷர்மிளா கைது! தெலங்கானாவில் பரபரப்பு!

 
ஷர்மிளா ஜெகன்மோகன் தங்கை

ஆண்களை விட  பெண்களுக்கு போராடும் குணம் அதிகம். இது ஏதோ தமிழகத்தின் பழமொழியோ.. முன்னோர்கள் சொல்லி  சென்ற முதுமொழியோ கிடையாது. உலகம் முழுவதுமே பெண்களின் போராட்ட குணம் அளப்பரியது. ஒவ்வொரு துறையிலும் பெண்கள் நுழைந்து சாதித்து வருகிறார்கள். ஆனால், அரசியலில் பெண்கள் அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி.. எதிர் கட்சியாக இருந்தாலும் சரி.. தினந்தோறும் போராடித்தான் தீர வேண்டும். இன்னொரு ஜெயலலிதாவாக உருவாகிறார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜயசாந்தி, ரோஜா எல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் தங்களது போராட்ட குணங்களில் சமரசம் செய்து கொண்டனர். ஆனால், சினிமா மூலம் பிரபலமாகாத ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, மொத்த தெலுங்கானாவையும் அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்று தெலங்கானா போலீசாரால் ஷர்மிளா கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சகோதரன் ஆந்திராவின் முதல்வராக இருக்கும் போதே, தெலுங்கானாவில் கடந்த அக்டோபரில் தனிக் கட்சி துவங்கி கலக்கினார் ஷர்மிளா. அதற்கெல்லாம்  தெளிவான அரசியல் பார்வை வேண்டும். ஷர்மிளாவின் ஒய்.எஸ்ஆர் தெலுங்கானா கட்சி மக்களிடையே அடுத்தடுத்து பிரபலமானது. தற்போது தனது கட்சியை மேலும் விரிவுபடுத்தும் விதமாக, அவர் தெலுங்கானாவில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

அடுத்த தேர்தலில் தெலங்கானாவில் எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வரும் ஷர்மிளாவுக்கு தெலங்கானா மாநிலத்தில் ஆதரவு பெருகி வருகிறது. தெலுங்கானா முழுவதுமான பாத யாத்திரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஆளும் கட்சியான சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் மீது கடுமையாக குற்றச்சாட்டுகளைச் சொல்லியபடியே இப்போதே தேர்தலுக்கான அடித்தளத்தையும் மக்களிடையே விதைத்து செல்கிறார் ஷர்மிளா.

YSR Sharmila

இந்நிலையில், தெலங்கானாவின் மகபூபாபாத்தில் நேற்று யாத்திரை மேற்கொண்டிருந்த ஷர்மிளாவை ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியினர் வரவேற்றனர். இதனிடையே ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி தொண்டர்கள் ஷர்மிளாவை வரவேற்று வைத்திருந்த பேனர், கட்அவுட்டுகளை ஆளும் டிஆர்எஸ் கட்சியினர் சேதப்படுத்தி இருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இரு கட்சியின் தொண்டர்களும் மோதிக் கொண்டதால் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதையடுத்து ஷர்மிளாவின் பாத யாத்திரைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை இன்று காலை போலீசார் திடீரென ரத்து செய்தனர். இது தொடர்பாக ஷர்மிளாவுக்கு நோட்டீஸ் வழங்கினர். ஆனால், இதை ஏற்க மறுத்த ஷர்மிளா பாத யாத்திரையை தொடர்ந்து மேற்கொள்வதாக கூறியதால் அவரை போலீசார் கைது செய்து ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திரா, தெலங்கானா அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web