கவர்ச்சி நடிகை ஆண்ட்ரியா திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!

 
ஆண்ட்ரியா
 

தமிழ்த் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாகத் தான் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் 'மாஸ்க்' என்ற திரைப்படம் வெளியானது. ரசிகர்களிடையே இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, வெற்றிமாறன் மற்றும் சிம்பு இணைந்து உருவாகும் 'அரசன்' படத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இதில் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா நேற்று திருவண்ணாமலைக்குச் சென்றார். அங்குள்ள புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்ததும் முதலில் சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்தார். அதன்பின்னர் அருணாசலேஸ்வரர் சன்னதிக்குச் சென்றார்.

திருவண்ணாமலை கோவில்

அங்கு அவர் உண்ணாமலை அம்மன் சன்னதியிலும் வழிபாடு செய்தார். தரிசனம் முடிந்த பிறகு ஆண்ட்ரியாவுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. சினிமா பிரபலங்கள் வருவது வழக்கம் என்றாலும், ஆண்ட்ரியா திடீரென வந்ததால் கோவிலில் இருந்த பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர். நடிகை ஆண்ட்ரியாவின் இந்த ஆன்மிகப் பயணம் குறித்து அப்பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!