கிரிக்கெட் போட்டியில் 'நோ பால்' கொடுத்ததால் ஆத்திரம்.. நடுவராக இருந்த இளைஞர் அடித்துகொலை !

 
'நோ பால்

ஒடிசா மாநிலத்தில் சௌத்வார் என்ற பகுதியில் மன்ஹிசலந்தா என்ற கிராமம் உள்ளது. அங்கு உள்ளூர் இளைஞர்களுக்கு இடையே பிரென்ட்லி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் லக்கி ரவுட் என்ற 22 வயது இளைஞர் நடுவராக இருந்துள்ளார். போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் நடுவர் லக்கி பந்துவீச்சாளர் 'நோ பால்' வீசியதாக சைகை காட்டினார். ஆனால், அது நோ பால் இல்லை என பந்துவீச்சாளரும் பீல்டிங்கில் இருந்த அணியின் வீரர்களும் வாக்குவாதம் செய்யத் தொடங்கினர். ஆனால் அது நோ பால் என்று நடுவரான லக்கி ரவுட் தெரிவித்தார்.

'நோ பால்

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி மோதலில் வெடித்தது. பீல்டிங் அணியில் இருந்த வீரர்கள் பேட் மட்டையை எடுத்து லக்கி ரவுடை தாக்க தொடங்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். எனினும் ஆத்திரம் தீராத இளைஞர்கள்,  ஆயுதங்களால் தாக்கத் தொடங்கினர்.

ஸ்முதிரஞ்சன் ராவத் என்ற நபர் நடுவர் லக்கியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்தம் வெளியேறி லக்கி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற வீரர்கள், லக்கியை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி லக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

'நோ பால்

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை உள்ளூர் மக்கள் திரண்டு பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டில் நோ பால் கொடுத்ததற்காக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web