முட்டை கேட்டதால் ஆத்திரம்... மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சமையலர், உதவியாளர்!

 
பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்டபோது முட்டை வழங்கும்படி கேட்ட 5-ம் வகுப்பு மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சமையலர் மற்றும் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த செங்குணம் (கொள்ளை மேடு) கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கடந்த 2-ந்் தேதி சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவின் போது முட்டை வழங்கப்பட்டது. அப்போது 5-ம் வகுப்பு மாணவன், அங்கு சமையலர் லட்சுமியிடம் சென்று தனக்கு முட்ைட வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் உனக்கு முட்டை வழங்க முடியாது என்று கூறி சமையலர் லட்சுமியும் உதவியாளர் முனியம்மாவும் மாணவனை துடைப்பத்தால் தாக்கியுள்ளனர். இதனை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். தகவல் அறிந்த மாவட்ட சத்துணவு நேர்முக உதவியாளர் மற்றும் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் விரைந்து சென்று சமையலர் லட்சுமியும் உதவியாளர் முனியம்மாளையும் பணியிடை நீக்கம் செய்தனர்.

மேலும் ஊர் மக்கள் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்ததையடுத்து சமையலர் லட்சுமியும் உதவியாளர் முனியம்மாளையும் போளூர் போலீசார் கைது செய்தனர். இது ெதாடர்பாக போளூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக அங்கு பணிபுரிந்த உதவி ஆசிரியர் புளோராவை வட்டார கல்வி அலுவலர் வேறு ஊருக்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web