வாங்கிய மளிகைப் பொருட்களுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்.. வியாபாரியை தாக்கிய திமுக நிர்வாகிகள் கைது!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரில் வசிப்பவர் அப்துல் ஜாபர் (40). இவர் திமுக 11வது வார்டு செயலாளர். எழுவன்கோட்டை சாலையில் அயூப் கான் (33) நடத்தும் மளிகைக் கடையில் மளிகைப் பொருட்கள் வாங்கி வந்தார். ஆனால், இவர் முறையாக பணம் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, அப்துல் ஜாபரின் மகன் அந்தக் கடையில் இருந்து ரூ.110க்கு மளிகைப் பொருட்கள் வாங்கினார். ஆனால் இவர் பணம் செலுத்தவில்லை.
இதனால், நேற்று முன்தினம் இரவு மளிகைக் கடைக்கு வந்த அப்துல் ஜாபரின் மகனுக்கு மளிகைப் பொருட்களை அயூப் கான் கொடுக்க மறுத்துவிட்டார்.வீட்டில் இருந்த அப்துல் ஜாபர், மளிகைப் பொருட்கள் கொடுக்கவில்லை என்ற தனது மகனின் கூற்றைக் கேட்டு கோபமடைந்தார். இதையடுத்து, கண்ணன்கோட்டையைச் சேர்ந்த தனது நண்பரும் முன்னாள் திமுக இளைஞர் அணி நிர்வாகியுமான லெட்சுமணன் (43) உடன் சேர்ந்து அயூப் கானைத் தாக்கினார். கடையில் இருந்த பொருட்களும் சேதமடைந்தன.
இது குறித்து டிஎஸ்பி கவுதம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, தேவகோட்டை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்துல் ஜப்பார் மற்றும் லெட்சுமணன் இருவரையும் கைது செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!