ஆனி கொடை விழா... விளாத்திகுளத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் ஆனிக் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவிலின் ஆனி மாதக் கொடை விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, இராமநாதபுரம்,மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
இப்போட்டியை தமிழர் விடுதலை களம் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜ்குமார் பாண்டியன் மற்றும் விளாத்திகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனிய சக்தி இராமச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் சிறிய மாடுகளுக்கு 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 5 மைல் தூரமும் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை நீண்ட தூரம் ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறமும் நின்று கண்டு ரசித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!