அனில் அம்பானி மகன் வழக்குப்பதிவு ... வங்கிக்கடன் முறைகேடு!
தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தவில்லை என ஏற்கனவே பல வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவிடம் பெற்ற ரூ.228 கோடி கடனை முறையாக செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் கடன் 2019 செப்டம்பர் 30-ஆம் தேதி வாராக் கடனாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து யூனியன் வங்கி தரப்பில் சிபிஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வங்கிக் கடன் உரிய நோக்கத்துக்காக பயன்படுத்தப்படாமல், வேறு வழிகளில் முறைகேடாக செலவழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விவரம் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல், இயக்குநர் ரவீந்திர சரத் சுதாகர் உள்ளிட்டோர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அம்பானி குழும விவகாரம் மீண்டும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
