அனில் அம்பானிக்கு மேலும் சிக்கல்… ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்!

 
அனில் அம்பானி
 

அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.1,800 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ரிலையன்ஸ் வீட்டுக் கடன் நிதி நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் வணிகக் கடன் நிதி நிறுவனம் மூலம் பொது நிதியில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

2017 முதல் 2019 வரை எஸ் வங்கி, இந்த இரு நிறுவனங்களில் ரூ.5,000 கோடிக்கு மேல் முதலீடு செய்தது. ஆனால் இந்த தொகை 2019-ஆம் ஆண்டில் வாராக் கடனாக மாறியது. செபி கட்டுப்பாடுகள் காரணமாக நேரடியாக முதலீடு செய்ய முடியாத நிலையில், எஸ் வங்கியை பயன்படுத்தி ரிலையன்ஸ் நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் கடன் வழங்கியதாக விசாரணையில் தெரியவந்தது.

இதில் பெரும் நிதி முறைகேடு நடந்திருக்கலாம் என அமலாக்கத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. பண முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் அனில் அம்பானிக்குச் சொந்தமான சொத்துகள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை மொத்தமாக ரூ.12,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!