ரூ.581 கோடி அனில் அம்பானி சொத்துகள் முடக்கம்!
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் வர்த்தக நிதி நிறுவனங்கள் ரூ.11 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை என வங்கிகள் புகார் அளித்துள்ளன. யெஸ் வங்கி, இந்திய யூனியன் வங்கி, மகாராஷ்டிரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய புலனாய்வு நிறுவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. தொடர்ந்து அமலாக்கத் துறை கடந்த 6ம் தேதி பல இடங்களில் சோதனை மேற்கொண்டது. விசாரணையில் முறைகேடு நடந்தது உறுதியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து பல மாநிலங்களில் உள்ள அனில் அம்பானி தொடர்புடைய சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.581.65 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக ரூ.16,310 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
