அனிருத் கல்யாணம் எப்போது? அப்பா ரவி ராகவேந்திரா ’பளிச்’ பதில்!
தமிழ், தெலுங்கைத் தாண்டி இந்தி சினிமாவிலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தமிழில் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கும், இந்தியில் ஷாருக்கானின் கிங் படத்துக்கும் தற்போது அவர் இசையமைத்து வருகிறார். தொழிலில் உச்சத்தில் இருந்தாலும், அனிருத் இன்னும் சிங்கிளாகவே இருப்பது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

அனிருத் திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவரது தந்தை ரவி ராகவேந்திரா இதற்கு பதிலளித்துள்ளார். “இன்று எந்த பையன் அப்பா, அம்மாவிடம் வந்து நீங்கள் பெண் பாருங்கள் என்று சொல்கிறான். சிலர் சொல்வார்கள். பலர் பெற்றோரிடம் கேட்பதே இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

“திருமணம் செய்துகொள்கிறேன் என்று மட்டும் சொல்கிறார்களே தவிர, நான் செய்துகொள்ளவா, நீங்கள் பெண் பார்க்கிறீர்களா என்று யாரும் கேட்பதில்லை. பார்ப்போம், அனிருத் எப்போது சொல்கிறார்” என ரவி ராகவேந்திரா கூறிய வார்த்தைகள் கவனம் பெற்றுள்ளன. இந்த பதில் அனிருத் கல்யாணம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
