நடிகை அஞ்சலிக்கு ரகசிய திருமணம்... ?!

 
காதல் தோல்வி குறித்து பகிரங்க அறிவிப்பு !அஞ்சலி கண்ணீர் பேட்டி! காதல் தோல்வி குறித்து பகிரங்க அறிவிப்பு !அஞ்சலி கண்ணீர் பேட்டி!

’கற்றது தமிழ்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இவர்  'அங்காடித் தெரு’, ’மசாலா கஃபே’  எங்கேயும் எப்போதும் போன்ற பல திரைப்படங்களில் இவரது நடிப்பு நடிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும்  பிசியாக நடித்து வருகிறார். இவரும்   நடிகர் ஜெயும் காதலித்து வந்ததாக தொடக்கத்தில் தகவல்கள் பரவின.  இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்தன.  இருவருமே அதை மறுத்தனர்.   ‘நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்’ என்றே கூறி வருகின்றனர்.

அஞ்சலி

இடையில், சித்தி கொடுமை காரணமாகவும் திடீரென அதிகரித்த உடல் எடை காரணமாகவும் அஞ்சலிக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டன.   தற்போது  இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீண்டு   தற்போது செம ஃபிட்டாக  டோலிவுட்டிலும், தமிழிலும் கவனம் செலுத்தி வருகிறார்.  ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்ஸ்’ படத்தில்  நடித்து வருகிறார்.  இந்நிலையில்தான், இவருக்குத் தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் முடிந்துவிட்டது என செய்திகள் பரவின. இது குறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ”சினிமாவில் என்னைப்பற்றி என்ன எழுத வேண்டும், யாருடன் இணைத்து எழுத வேண்டும் என அவர்களே முடிவு செய்து பொய்யான செய்தியை  பரப்பி விடுகின்றனர்.  

அஞ்சலி

முதலில் நடிகர் ஜெய்யை காதலித்ததாக செய்தி வந்தது. பின்னர் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டேன் எனக் கூறினர்.  எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.  எனக்கு சினிமாவில் நிறைய நண்பர்கள் இருக்கின்றனர் என்பது உண்மை தான். அதற்காக நடிகை  என்பதால் அவர்கள் இஷ்டத்திற்கு எழுதி விடுகின்றனர்” என காட்டமாக பதில் அளித்துள்ளார் நடிகை அஞ்சலி...  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!