அண்ணா பல்கலை விவகாரம்... ஞானசேகரனின் கூட்டாளியிடம் 2 கிலோ வெள்ளி, பைக் பறிமுதல்!

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஞானசேகரனின் கூட்டாளி கைது செய்யப்பட்டார்.இவரிடம் 2 கிலோ வெள்ளி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2024 டிசம்பர் 23ம் தேதி னார். இந்த வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் இவர், பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு கொள்ளை வழக்கிலும் கைது செய்யபட்டு சிறை சென்றவர் என தெரிய வந்தது. அதன்படி 2019ம் ஆண்டு நீலாங்கரை, கானத்தூர் பகுதிகளில் வீடுகளில் ஞானசேகரன் கொள்ளையடித்து போலீசில் சிக்கி சிறை சென்றுள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன் என கூறி பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். பிரியாணி கடை நடத்தி கொண்டே இரவு நேரங்களில் பள்ளிக்கரணை பகுதிக்கு காரில் சென்று சிசிடிவி கேமிரா இல்லாத வீடுகளை நோட்டமிட்டு 7 வீடுகளில் வெள்ளி பொருட்கள், 200 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை கொள்ளை அடித்தது தெரிய வந்தது.
இந்நிலையில், ஞானசேகரனின் செல்போனுக்கு பொள்ளாச்சி அடிக்கடி பேசியுள்ளார். அதன்பேரில் நேற்று முரளிதரனை கைது செய்து விசாரணை செய்தனர். இவர் 8 ஆண்டுகளுக்கு முன் ஒரு மோசடி வழக்கில் கைது சிறையில் அடைக்கப்பட்டார். அதே சமயத்தில் ஞானசேகரனும் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்துள்ளார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளிவந்த பின்பும் இந்த நட்பு தொடர்ந்துள்ளது.
பின்னர் முரளிதரன் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டு பணத்தை இழந்து கடனாளியாகி உள்ளார். அப்போது சிறை நண்பர் ஞானசேகரனை சந்தித்து பேசி வந்தார். 2019ல் மதுராந்தகத்தில் ஞானசேகரனுடன் சேர்ந்து ஆள் கடத்தலில் ஈடுபட்டதால் இருவரும் கைதாகினர். 2022ல் பள்ளிக்கரணையில் இருவரும் சேர்ந்து 2 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இருவரும் சேர்ந்து திருவான்மியூரில் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதில் நினைத்தபடி சக்சஸ் ஆகவில்லையாம். அதன் பிறகு முரளிதரன் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் போது உடன் பணியாற்றிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது காதல் மனைவிதான் முரளி வாங்கிய கடன்களை அடைத்து வருகிறார் என்பது கூடுதல் தகவல். தற்போது முரளி பஸ் கிளீனராக பணியாற்று வருகிறார். முரளி கொடுத்த தகவலின் பேரில் 2 கிலோ வெள்ளி பொருட்கள், பெருங்களத்தூர் பாலத்தின் கீழ் நிறுத்தி இருந்த ஞானசேகரனின் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!