வாழப் பிடிக்கல... கூவம் ஆற்றில் குதித்து அண்ணா பல்கலை மாணவி தற்கொலை!

 
நேப்பியர்
 

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்த யுவஸ்ரீ, சம்பவத்தன்று மாலை நேப்பியர் பாலம் அருகே சென்றபோது திடீரென பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் குதித்தார். இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த அவரது பையை கைப்பற்றி சோதனை செய்தனர்.

ஆம்புலன்ஸ்

பையில் கிடைத்த தற்கொலை குறிப்பில், “எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. பெற்றோரும் சகோதரியும் என்னை மன்னியுங்கள்” என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மெரினா கடல் பகுதியில் யுவஸ்ரீயின் உடல் கரை ஒதுங்கியது.

போலீஸ்

மாணவியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காதல் தோல்வியா, குடும்ப பிரச்சினையா, அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் சிக்கலா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் பெற்றோர், தோழிகள் மற்றும் செல்போன் அழைப்புகள், சமூக வலைத்தள தகவல்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!