விஜய் சொந்தமாக நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியில் இந்தி உள்ளது... அரசுப்பள்ளிகளில் மட்டும் மறுப்பு ஏன்? அண்ணாமலை ஆவேசம்!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கான கல்வி நிதியை விடுவிக்கமுடியும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிடு வருகின்றனர். இது குறித்து சென்னை கமலாலயத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “புதிய கல்விக் கொள்கையில் இந்தியை பிரதமர் ஒருபோதும் திணிக்கவில்லை.
மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படாது. தமிழ்நாட்டில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கட்டாய மொழியாக தமிழ் இல்லை. மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பல்வேறு மொழிகள் கற்கும் வாய்ப்புள்ளது. விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சொந்தமாக சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வருகிறார். சில அரசியல் தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி உள்ளது. விருப்ப மொழியாக இந்தி அல்லது பிற மொழி பயிலலாம் என 2016ல் சீமான் கூறி இருந்தார். தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 மொழியில்தான் படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது ஏன்?
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில் குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி கற்கும் பொழுது, தமிழக அரசுப்பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பை ஏன் தட்டிப் பறிக்கிறீர்கள்? 30,000 கோடி மார்கெட் கல்வியை தனியார் மயமாக்க திமுக முயற்சிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!