உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும் அதனால எங்களையும் பேச சொல்லி கட்டாயப்படுத்திறீங்க... பிரகாஷ்ராஜ் காட்டம்!

இந்தியா முழுவதும் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு அதனை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க..
— Prakash Raj (@prakashraaj) February 21, 2025
எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க.
ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்..
இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. #GetOutModi #justasking
இதனிடையே மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்க முடியும் என மத்திய அரசு கூறியுள்ளது. புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. எக்ஸ் வலைதளத்தில் #GetOutModi ஹேஸ்டேக் திமுகவினரால் டிரெண்டிங் செய்யப்பட்டது.
இந்நிலையில், ‘GET OUT MODI' முழக்கத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பதிவில், ” உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும். இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது” என குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!