"அரசியல் என வந்துவிட்டால் இதையெல்லாம் கடக்க வேண்டும்" - விஜய்க்கு அண்ணாமலை அறிவுரை!
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரான அண்ணாமலை, அரசியல் களம் என்பது பூப்பாதை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
'டிஎம்கே ஃபைல்ஸ்' வெளியீடு தொடர்பாக அண்ணாமலை மீது டி.ஆர். பாலு அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் பங்கேற்ற அண்ணாமலை, நீதிமன்றத்தில் டி.ஆர். பாலுவிடம் சுமார் 3 மணி நேரம் குறுக்கு விசாரணை நடத்தியுள்ளார். "நான் கேட்ட பல கேள்விகளுக்குத் 'தெரியாது, தெரியாது' என்றே அவர் பதிலளித்தார். அவதூறு வழக்குத் தொடர்ந்துவிட்டு, பதில் தெரியாமல் அவதூறு வாங்கப்போகும் ஒரே நபர் அவர்தான்" என்று விமர்சித்துள்ளார். மேலும் டி.ஆர். பாலு மீது தான் புதிதாக மற்றுமொரு அவதூறு வழக்கைச் விரைவில் தொடரப்போவதாகவும் அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜய் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்து அண்ணாமலை பேசுகையில்: "அரசியல் என்று வந்துவிட்டால் குடும்ப உறுப்பினர்களைக் கூட இழுத்துப் பேசி முட்டுச்சந்தில் நிற்க வைக்கும் சூழல் இங்கு உள்ளது. விஜய் இவை அனைத்தையும் சமாளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். விஜய் இன்னும் அரசியல் ரீதியாகப் பக்குவப்பட வேண்டும் என்றும், வரப்போகும் சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது பார்வையை முன்வைத்துள்ளார்.
நடிகை திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய சர்ச்சை குறித்து அண்ணாமலை குறிப்பிடுகையில், "பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஏற்கனவே கட்சியின் சார்பில் வருத்தம் தெரிவித்து விட்டார். நயினார் நாகேந்திரனும் தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளதால், இந்தப் பிரச்சினை இத்துடன் முடிந்ததாகவே நான் கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தனது நிதிநிலை குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அண்ணாமலை, "எனக்கு ரூ.2.50 கோடி கடன் இருப்பதும், விவசாய நிலம் வாங்கியிருப்பதும் பொதுவெளியில் உள்ள உண்மை. நான் எதையும் மறைக்கவில்லை" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
