திமுகவினர் காவல்துறை விசாரணையில் ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர்... அண்ணாமலை கண்டனம்!

 
அண்ணாமலை
 


 
போலீஸ் விசாரணையில் திமுகவினர் ராஜமரியாதையுடன் நடத்தப்பவதாக  பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், காவல்துறையினரும், அந்தப் பகுதி திமுகவினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

அண்ணாமலை

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் திமுகவினர், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் திமுகவினர் யாரும், காவல்துறை விசாரணையில்  தாக்கப்படுவதில்லை. ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளைக் காவல்துறை விசாரணையில்  கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்து வருகிறது.  
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2022 லிருந்து  23 பேர் காவல்துறை விசாரணையில்  மரணமடைந்துள்ளனர். ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர், இது குறித்து எந்தக் கவலையுமின்றி இருக்கிறார். தமிழகத்தில், ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் நண்பர்கள் குற்றம் செய்தால், அவர்களைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் திமுக அரசு, ஏழை எளிய மக்கள் என்றால், அவர்கள் உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

அண்ணாமலை
உடனடியாக, திருப்புவனம் இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள்  மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகப் போராடும் திருப்புவனம் மக்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை என பதிவிட்டுள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது