வைரல் வீடியோ... அண்ணா... Fight பண்ணிட்டே இருங்க… சீமானின் கையைப் பிடித்து ஆறுதல் சொன்ன அண்ணாமலை!

பாஜக கட்சியின் பிரமுகர் இல்ல திருமண விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதே விழாவில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பல அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழா முடிந்த உடன் சீமான் காரில் கிளம்பினார். அப்போது அண்ணாமலை உடனடியாக காருக்குள் இருந்த சீமானின் கைகளைப் பிடித்துக் கொண்டு அண்ணா Fight பண்ணிட்டே இருங்க strong ஆ இருங்க.
விட்டுடாதீங்க அண்ணா எனக் கூறியுள்ளார். அதாவது சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் அது குறித்து 12 வாரத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கு குறித்து சீமான் பேசிய பல வார்த்தைகள் சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு கண்டனங்களும் குவிந்துள்ளன.
அதே சமயத்தில் பெரியாரைப் பற்றி சர்ச்சையாக பேசியதால் தான் சீமான் குறிவைக்கப்படுகிறார் என பாஜகவினர் கூறியுள்ளனர். ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவாக சீமான் செயல்படுவதாக ஒரு கருத்தும் பரவி வருகிறது. முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை மற்றும் சீமான் இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கட்டிக் கொண்டனர். இந்நிலையில் தற்போது சீமானுக்கு அண்ணாமலை ஆறுதல் சொன்ன வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!