இமயமலை பாபா குகையில் அண்ணாமலை!

 
இமயமலையில் அண்ணாமலை!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை இமயமலைக்குச் சென்றுள்ளார்.

இது குறித்து அண்ணாமலை, இமயமலையில் உள்ள பாபா குகையில் தியானத்தில் ஈடுபட்டுள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், அதேமேடையில் அண்ணாமலையின் தலைமை நிர்வாகத் திறன்களை பாராட்டி அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை உள்பட 39 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினா் பதவி வழங்கப்பட்டது.

அண்ணாமலை

இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை இமயமலைக்கு சென்றுள்ளார். அவர், நேற்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட நிலையில், தில்லியில் இருந்து ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

ஆன்மிகப் பயணத்தை முடித்துக்கொண்டு தில்லியில் பாஜக மூத்த தலைவர்களை அண்ணாமலை சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web