முதல்வர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடுகிறார் ... அண்ணாமலை காட்டம்!

 
அண்ணாமலை அண்ணாமலை


தமிழகத்தில் திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 503 ல், சிலிண்டருக்கு ரூ100 மானியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து 4 ஆண்டுகள் கடந்துவிட்டன  என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக குறிப்பிட்டுள்ளார். நமது நாடு, ஒட்டு மொத்த சமையல் எரிவாயு பயன்பாட்டில் சுமார் 60%, இறக்குமதியையே சார்ந்துள்ளது. சர்வதேச அளவில், சமையல் எரிவாயு நிர்ணயம் செய்யும் சவுதி ஒப்பந்த விலை, கடந்த 2023 ல்  ஜூலை மாதம் $385 ஆக இருந்தது, 2025 பிப்ரவரியில், $629 ஆக, 62% விலை உயர்ந்திருக்கிறது. ஆனால் நமது நாட்டில், கடந்த 2023 ம் ஆண்டு ஆகஸ்ட் ரூ200 விலை குறைக்கப்பட்டது. மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மகளிர் தினத்தை முன்னிட்டு, மேலும் ரூ100 விலை குறைப்பு செய்யப்பட்டது.  

அண்ணாமலை


 2023ம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவிலான சமையல் எரிவாயு விலை உயர்வு, நமது நாட்டு மக்களை பாதிக்காமல், விலை குறைக்கப்பட்டே வந்திருக்கிறதே தவிர அதிகரிக்கப்படவில்லை.  2024 ம் ஆண்டு முழுவதுமே, சமையல் எரிவாயு விலை, சிலிண்டருக்கு ரூ803 ஆகவே இருந்தது. உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ரூ300 மானியத்தோடு, சிலிண்டர் விலை ரூ503 ஆகவே இருந்து வருகிறது.

 அண்ணாமலை
உண்மை இப்படி இருக்க, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 503 ல், சிலிண்டருக்கு ரூ100 மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. அதனைப் பற்றி நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூட பேசாமல், தற்போது வந்து நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?