இன்று டெல்லி செல்கிறார் அண்ணாமலை... அமித்ஷாவை சந்தித்து பேச்சு... பரபரக்கும் தமிழக அரசியல்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று காலை டெல்லி செல்ல உள்ளார். அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவை சந்தித்துள்ள நிலையில், இன்று காலை டெல்லியில் அண்ணாமலை, அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு, தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. இது வரையில் பாஜகவுடன் நிச்சயமாக கூட்டணி கிடையாது என்றூ கூறி வந்த நிலையில், திடீர் திருப்பமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி, "தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவிடம் விவாதித்தோம். தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டுமென அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன். மும்மொழிக் கொள்கையை திணிக்க கூடாது. தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது; அப்படி மேற்கொண்டால் நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும்.
கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை, முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினையை பேசுவதற்கு தான் அமித்ஷாவை சந்தித்தேன். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களது கொள்கை எப்போதும் நிலையாக இருக்கும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படுவது, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது.
கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும். தேர்தல் நேரத்தில் என்ன சூழ்நிலை இருக்குதோ, அதை பொறுத்தே கூட்டணி மாறும். கூட்டணி இருக்கு இல்லை என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்வு காணும் கட்சி அதிமுக" என்றார்.
இந்நிலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மார்ச் 27ம் தேதி காலை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!