செம அறிவிப்பு.. 12 வது பாஸானால் மாதந்தோறும் ரூ2500 உதவித்தொகை! மாநில அரசு அறிவிப்பு!

 
ரூபாய்

ஸ்டிக்கர் அரசியல் தமிழகத்தில் மட்டுமல்ல... இந்தியா முழுவதுமே பரவி வருகிறது. ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுப்பதில் பல மாநில முதல்வர்கள் தவறி விடுகிறார்கள். ஆட்சியைப் பிடிப்பதற்காகவும், அதன் பின்னர் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் இவர்கள் தீட்டுகிற திட்டங்கள் எல்லாமே பகீர் ரகம். மிக்ஸி, க்ரைண்டர், டி.வி., துவங்கி இலவச அரசி, கோதுமை,  பொங்கலுக்கான கரும்பு, இலவச வேட்டி சேலை என மக்களின் வரிப் பணம் சின்னாபின்னமாகி கரைகிறது.

இதில் புழுக்கள் நெளியும் வெல்லமும், வண்டுகள் கரைத்து காலி செய்த ஏலக்காயும், கடற்கரையோரங்களில் நினைவு சின்னங்களுக்கும், கடலுக்குள் நினைவு சின்னங்களுக்கும் கோடிகளை கொட்டி இறைக்கும் இரு பெரும் திராவிட அரசியல் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே அடுத்த தலைமுறை முன்னேறுவதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்து தருவதில் அரசு அதிகாரிகளும் தவறி விடுகிறார்களோ என்கிற ஐயம் ஏற்படுகிறது. தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கும் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக வழங்கியுள்ளார். ஆனால் மத்திய பிரதேசத்தில் அடுத்து தேர்தல் வர இருப்பதையொட்டி, இப்போதே மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 தர துவங்கியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக  சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ2500 வழங்க உத்தரவிட்டுள்ளது. 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றது.

இளைஞர்கள்

இதற்கான சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாகேல் அரசாங்கத்தின் கடைசி மாநில பட்ஜெட் இதுவாகும்.இதனால் சலுகைகள் அதிகம் வழங்கப்பட்டுள்ளதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய உத்தரவின் கீழ் பயனடைய  12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று  குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள 18-35 வயதுக்குட்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இளைஞர்கள்

இதற்காக பட்ஜெட்டில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதே போல் அங்கன்வாடி பணியாளர்கள், வீட்டுக் காவலர்கள், கிராம கோட்வார்கள் மற்றும் பிறரின் மாதாந்திர கௌரவ ஊதியத்தையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளார் . இதன்படி  ரூ.6,500 ஊதியம் பெற்றவர்களுக்கு  ரூ.10,000 ஆகவும், ரூ.3,250ல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மினி அங்கன்வாடி பணியாளர்களுக்கு  ரூ 4,500லிருந்து  ரூ7,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web