அடி தூள்!! கோடைகால சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்!!

 
ரயில்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆண்டு தேர்வுக்கான பணிகள் மும்மூரமாக நடைபெற்று வருகிறது. இதன் பிறகு கோடைகாலத்தில் ஜாலியாக பொழுதை கழிக்க சுற்றுலா செல்ல தயாராகி வருகின்றனர். இதற்கான முன்பதிவுக்காக பெரும்பாலான மக்கள் காத்துக் கிடக்கின்றனர். பொதுமக்களின் தேவைகளை பொறுத்து தெற்கு ரயில்வே கோடைகால சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. 

கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்- நெல்லை இடையே, வாராந்திர சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. ஏப்ரல் முதல் தொடர்சியாக 12 வாரங்கள் தாம்பரம்-நெல்லை இடையே கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ரயில்

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையில் இருந்து இரவு 7.20 மணிக்கும், திங்கள்கிழமை தோறும் தாம்பரத்தில் இருந்தும் இரவு 10.20 மணிக்கும் இந்த சிறப்பு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் திருநெல்வேயில் இருந்து ஏப்ரல் 2, 9, 16, 23, 30; மே 7, 14, 21, 28; ஜூன் 4,11, 18, 25 ஆம் தேதிகளில் இரவு 7.20 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். 

சிறப்பு ரயில்

சென்னை தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 3, 10, 17, 24; மே 1, 8, 15, 22, 29; ஜூன் 5,12, 19, 26 ஆம் தேதிகளில் இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். தென்காசி, சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web