பதைபதைக்கும் வீடியோ!! மேலே இருந்து அறுந்து விழுந்த ராட்டினம்!!

 
ராட்டினம்

அஜ்மீரில் உள்ள கண்காட்சி ஒன்றில் செங்குத்தான அச்சில் சுழலும் ராட்டினத்தின் கேபிள் திடீரென அறுந்து விழுந்தது. கீழே இருந்து மேலெழுந்து மீண்டும் கீழே விழும் ராட்டினம் உயரத்தில் இருந்து கீழே வரும் போது அதன் கேபிள் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து ராட்டினத்தில் சவாரி செய்தவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.  கண்காட்சியில் இருந்தவர்கள் உடனே ஓடி சென்று காயமடைந்தவர்களை மீட்க உதவி செய்தனர். ஆனால் ராட்டினத்தின் ஆபரேட்டர் விபத்து நிகழ்ந்ததும் தப்பி ஓடி விட்டான். பின்னர் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  இதே போல்  கடந்த ஆண்டு பஞ்சாபின் மொஹாலியில் தசரா கண்காட்சியில் ராட்டினம் ஒன்று விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 


ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பேருந்து நிலையம் அருகே கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் ராட்டினம் ஒன்று திடீரென அறுந்துவிழுந்தது. இந்த கோர விபத்தில் 11 முதல் 15 குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பினர். வேகமாக  சுற்றிக்கொண்டிருந்த ராட்டினத்தின் கேபிள் திடீரென அறுந்து ராட்டினம் கீழே விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆம்புலன்ஸ்


இந்த விபத்துக் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர் காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஜேஎல்என் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து நடந்ததும் ராட்டின ஆபரேட்டர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web