வங்கதேசத்தில் மீண்டும் கொடூரம்… 3 வது இந்து பலி!
வங்காளதேசத்தில் கடந்த 2024 ஜூலியில் வெடித்த மாணவர் போராட்டம், ஷேக் ஹசீனா அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. பதவி விலகிய ஷேக் ஹசீனா, ஆகஸ்டு 5-ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பின்னர் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்நிலையில், கிளர்ச்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாதி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அந்த மரணத்தைத் தொடர்ந்து நாட்டில் வன்முறை தலைதூக்கியது. முன்னாள் அமைச்சரின் வீடுகள் எரிக்கப்பட்டன. ஷேக் முஜிபுர் ரகுமானின் வீடு சூறையாடப்பட்டது. இந்திய துணைத்தூதரின் வீடு மீது கல்வீச்சு நடந்தது. இதன்பின்னர் இந்துக்கள் குறிவைக்கப்பட்டனர். மைமன்சிங் நகரைச் சேர்ந்த திபு சந்திரதாஸ், மத நிந்தனை செய்ததாக கூறி நிர்வாணப்படுத்தப்பட்டு, கட்டி வைத்து அடித்து கொல்லப்பட்டு, உடல் எரிக்கப்பட்டது அனைவரையும் உலுக்கியது.

இந்நிலையில், ஷரியத்பூர் நகரைச் சேர்ந்த வியாபாரி கோகன் சந்திர தாஸ் மீது கும்பல் தாக்குதல் நடத்தியது. ஆயுதங்களால் தாக்கி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். உயிர் தப்ப முயன்றாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதற்கு முன் அம்ரித் மொண்டலும் கும்பல் தாக்குதலில் பலியான நிலையில், இது மூன்றாவது இந்து மரணம் ஆகும். பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், வங்காளதேசத்தில் பரவும் இந்த வன்முறை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
